Thursday, January 27, 2011

JAMIA DARUSSALAM OOMARABAD

அந்த"மான்" வந்தது ! ஆச்சரியம் தந்தது !


இன்று (26-01-2011) குடும்பத்தினருடன் இணையத்தில் உரையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாக நண்பர் ஹ+ஸைன் அவர்களிடமிருந்து எமது வீட்டு நம்பருக்கு ஒரு போன்  கால் வருகிறது. தஞ்சாவூரிலிருந்து பேசுவதாக சொன்னபோது எனக்கு ஆச்சரியம். அலைகடலுக்கு அப்பாலிருக்கும் அந்தமான் தீவு அடிபெயர்ந்து எப்போது தஞ்சைத்தரணிக்கு வந்தது? எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அப்படியே அவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் புரிந்தது. அந்தமானிலிருந்து தமிழகத்துக்கு சொந்த வேலையாக வந்தவா எம்மைக் காண்பதற்காகவே தஞ்சைக்கு வந்திருக்கிறார். 
உடனடியாக எமது வீட்டுக்கு வரவேண்டும் என அழைத்தேன் அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டில் உள்ள கணிணி மூலம் இணையத்தில் தொடர்பு கொண்டு நேரடியாகக் கண்டு அளவளாவினோம். அருகருகில் அமர்ந்து ஆசை தீரப்பேசினோம். 
உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகப் பயின்றோம் அந்த இன்ப நாட்களை இனிமையுடன் அசைபோட்டோம். 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று இணையத்தில் சந்திக்கிறோம்.     

மறக்க முடியுமா உமராபாத்தின் அந்த பசுமை நிறைந்த நினைவுகளை? உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். அறிமுகத்துக்காக சிலரை ஊர்ப்பெயரால் அழைப்பதுண்டு. அது போல் தான் ஹ+ஸைன் என்ற இயறபெயரைவிட "அந்தமான்" என்ற பெயரே பிரசித்தமானது. இது அந்தமானிலிருந்து வந்த "மான்" . அதானால் தான் அந்த"மான்" வந்தது ஆச்சரியம் தந்தது என்று தலைப்பு கொடுத்தேன்.

மறக்க முடியாத அந்த உமராபாத் நினைவுகளை இன்று இணையத்தில் அலசியபோது சமீக்த்தில் உமராபாத் சென்று தமது நினைவுகளை அசை போட்ட ஒரு முன்னாள் மாணவர்  ஜாமிஆவின் சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டிருந்தார். கண்ணைக்கவரும் ஜாமிஆவின் அந்த வண்ணப்படங்களை ஸ்லைட் ஷோவாக உலவ விட்டிருக்கிறேன்.
உமராபாத்தின் நினைவுகளை  எழுத ஆரமபித்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம். நேரம் கிடைக்கும் போது தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்   

      (இணையத்தில் உரையாடியபோது வெப்கேமராவில் கிளிக் செய்த படம்)
 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.